Skip to main content

பொறுத்திருப்போம்

 

அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகள் கையில் கூட துப்பாக்கிகள் இருப்பது சாதாரணம். வகுப்பறை சண்டைகளின் விளைவாக துப்பாக்கியால் சுட்டுக் கொள்(ல்)வது அவ்வப்போது செய்திகளில் வருவதைப் பார்த்திருப்போம்.


இப்போது போல முன்பெல்லாம் துப்பாக்கியை எளிதாகப் பயன்படுத்த முடியாது. துப்பாக்கியால் சுட வேண்டும் என்றால் நினைத்தவுடன் எடுத்து படக்கென சுட்டு விட முடியாது.


பெரிய பேரலில் மிகச்சிறிய உலோகக் குண்டுகளை நிரப்பி வைத்திருப்பார்கள். அந்த உலோகக் குண்டுகளோடு Gunpowder சேர்த்து துப்பாக்கிகளில் நிரப்பப்பட வேண்டும். அப்படி நிரப்பப்பட்ட பின்பு ஈரப்பதம் இல்லாமல் நன்கு காய்ந்துள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.


 அதன் பின்புதான் துப்பாக்கியைப் பயன்படுத்த முடியும். சுடுவதற்கு முன் powder நன்கு காய்ந்துள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளாவிட்டால் எதிரியின் துப்பாக்கிகளுக்கு இரையாக நேரும். 


எனவே சண்டை போடப் போகும் முன்பாக பொறுமையாக இந்தப் பவுடரை காயவைத்து தயாராக வேண்டும். 


Keep your powder dry என்றால் பதட்டப்படாமல் அமைதியாக இரு; அதேநேரம் தயார் நிலையில் இரு என்பது பொருள்.


இரண்டாம் உலகப்போரின்போது பெண்களும் ராணுவத்தில் இடம்பெற்றதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு அமெரிக்க நாடகம் 1945 இல் வெளிவந்தது. அதன் பெயர் Keep your powder dry. 


ஆனால் அந்த நாடகம் வெளிவருவதற்கு பல காலம் முன்பாக 1834 இல் வில்லியம் பிளாக்கர் (Wiiliam Blacker) என்பவர் எழுதிய Oliver's Advice என்ற கவிதையில் Trust in God and keep your powder dry என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. எதிரிகளோடு சண்டையிட துப்பாக்கிகளோடு ஆற்றைக் கடக்கும் போது Trust in God and keep your powder dry என்று சொல்லுவதாக எழுதப்பட்டிருந்தது. 


பதட்டப் படாமல் பொறுமையாக தயார் படுத்திக் கொள்வதற்கு இப்போதும் keep your powder dry என்ற வாசகம் பயன்படுத்தப்படுகிறது. 

Don't panic, you understand? All I am asking you is to keep your powder dry.

We have to keep your powder dry in case lockdown continues.

என்பன அவற்றுள் சில.


keep your powder dry என்பதற்கு Cambridge dictionary கூறும் விளக்கம்:


Keep your powder dry: to wait before taking action but be ready to take action if it is necessary.

Click here to read Oliver's Advice


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...