முன்பு
நான் கண்ட
இன்பமும் மகிழ்ச்சியும்
என்னருகில் அவன் இருந்த நாட்கள்
இப்போது
நான் அடையும்
இன்பமும் மகிழ்ச்சியும்
என் கனவில் அவன் இருப்பதால்..
எப்படியோ எப்போதும் இன்பம் தான்.
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
(திருக்குறள் 1215)
முன்பு நனவில் கண்ட
இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது
மட்டுமே இன்பமாக உள்ளது.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback