ஏற்கனவே அந்தப் பெண் அழகு.
இப்போது நீண்ட கண்களில் மை தீட்டிக்கொண்டு கூந்தலைச் சரிசெய்து கொண்டே தெருவில் நடந்து போகிறாளே!
எத்தனை இளைஞர்கள் பாவம் பரிதவித்துக் கிடப்பார்களோ?
நந்திவர்மன் தன் நாட்டில் எந்தக் குடிமக்களும் துன்பப்படவிடமாட்டானே!
இளைஞர்களையெல்லாம் தவிக்கவிட்டுக் கொண்டே அந்தப் பெண் இப்படி நடந்து போகிறாளே!
அந்தப் பெண்ணின் அம்மாவுக்கு இந்த அப்பாவி
இளைஞர்கள் மேல் அப்படி என்ன கோபமோ இந்தப் பெண்ணை தெருவில் செல்ல அனுப்பிவைத்திருக்கிறாள்.
இந்தப் புலவர்
தான் ரொம்பப் பாதிக்கப்பட்டிருப்பார் போல.
அரிபயில் நெடுநாட்டத் தஞ்சனம் முழுதூட்டிப்
புரிகுழல் மடமானைப் போதர விட்டாரால்
நரபதி எனும்நந்தி நன்மயி லாபுரியில்
உருவுடை இவள்தாயர்க் குலகொடு பகை உண்டோ?
(நந்திக் கலம்பகம்)
Comments
Post a Comment
Your feedback