அனிச்ச மலரே
நீ மென்மை தான்.
உனக்கொன்று சொல்லவா
உன்னை விடவும்
மென்மையானவள் என்னவள்.
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
(திருக்குறள் 1111)
விளக்கம்:
அனிச்சப்பூவே நல்ல மென்மைத் தன்மை பெற்றிருக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லிய தன்மை கொண்டவள்.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback