இடப்பக்கம் எதிர்மறையான விளைவைத் தரும் என்று ரோமானியர்கள் நம்பினார்கள்.
படுக்கையிலிருந்து எழும்போது இடப்பக்கமாக எழுந்தால் அந்த நாள் முழுவதும் எரிச்சலோடு இருக்க வேண்டி இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
எதைக் கொடுக்கும்போதும் வலது கையால் கொடுக்க வேண்டும் மங்களகரமான இடங்களுக்குச் செல்லும் போது வலது காலை முதலில் எடுத்து வைக்க வேண்டும் என்பதெல்லாம் இந்துக்களின் நம்பிக்கை.
Sinister என்பது தீய விளைவைத் தரும் ஒரு சக்தி என்று பொருள்படும். உண்மையில் அதற்கு 'இடப்புறமாகச் செய்வது' அல்லது 'இடக்கையால் செய்வது' என்பது தான் பொருள்.
ஒரு நாளில் சரி இல்லாதவையாக நடந்தால் யார் முகத்தில் விழித்தேனோ என்று அலுத்துக் கொள்வதும் உண்டு. இந்த நிலையை Get up on the wrong side of the bed என்று சொல்வார்கள்.
Yesterday, my boss was shouting at everyone. He must have got up on the wrong side of the bed.
Since morning not even a single piece is sold out. I must have got up on the wrong side of the bed.
இந்த வாக்கியங்களில் வரும் wrong side என்பது left side தான் என்பது சொல்லாமலேயே புரியும் தானே?
Cambridge dictionary says,
Get out of bed on the wrong side:
to be in a bad mood and to be easily annoyed all day.
Comments
Post a Comment
Your feedback