இல்லாதவர்களின் பின்னே சென்று அவரை எப்படியாவது தம்முடைய வழிக்குக் கொண்டுவந்து விடுவோம் என்று நினைத்து பேசுகின்ற அற்பமான மனிதர்கள் இருக்கிறார்கள்.
மற்றவர்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு தன் கருத்துக்களை ஏற்குமாறு செய்துவிடவேண்டும் என்று அவர்களைத் தொடர்ந்து செல்லும் கீழ்மக்களும் இருக்கிறார்கள்.
இந்த அற்பர்களின் முயற்சி எல்லாம் கருங்கல்லைக் கிள்ள முயற்சிக்கும் செயல் தான். கருங்கல்லைக் கிள்ள முயற்சி செய்து முயற்சி செய்து கை விரலை விரைவில் இழந்து நிற்பர்.
தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை
எங்கண் வணக்குது மென்பவர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப
கற்கிள்ளிக் கையிழந் தற்று.
(நாலடியார் 336)
Comments
Post a Comment
Your feedback