உலகமெங்கும் செல்லப்பிராணியாகக் கருதப்படுவது பூனை. பழகிய பின்பு மனிதர்களோடு மிக நெருக்கமாக இருப்பதால் பூனை செல்லப்பிராணியாகக் கருதப்படுகிறது.
பூனை எப்போதும் தனக்குத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு சுத்தமான பிராணி என்பார்கள்.
பூசுதல் என்றால் தூய்மை செய்தல் என்று பொருள்.
வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலும் எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
வெருகு என்றால் பூனை-காட்டுப் பூனை.
சுத்தப்படுத்திக் கொள்ளும் அதன் இயல்பைக் குறித்தே அப்படிக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பூனையின் மறுபக்கம் ஒன்று உண்டு. அது பூனை கொண்டுவந்து போடுகின்ற பொருட்கள்.
செத்துப்போன எலிகள், பாதி தின்று விட்டு மிச்சம் வைத்திருக்கின்ற மாமிசத் துண்டு என்று எது கிடைத்தாலும் தான் இருக்கும் இடத்தில் கொண்டுவந்து பத்திரப்படுத்தி வைக்கின்ற பழக்கம் பூனைகளுக்கு உண்டு.
அதனாலேயே பூனைகள் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் பூனைகள் இருக்கக்கூடிய இடம் அருவருப்பான இடமாகக் கருதப்படுவதும் உண்டு.
பூனைகளின் இந்தப் பண்பினைக் கருதியே சுத்தம் இல்லாமல் இருப்பதை அல்லது அழுக்குப்படிந்து கிடக்கும் இடத்தை பூனையோடு ஒப்பிட்டு ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதை,
Look like something the cat dragged in என்பார்கள்.
அதாவது , ஏன் சுத்தமில்லாமல் இப்படி இருக்கிறாய் பூனை கொண்டு வரும் பொருள்கள் போலே? என்பது தான் கேட்க வந்த கேள்வி.
பூனை தான் இருக்கும் வீட்டுக்கு அருவருப்பான பொருள்களைக் கொண்டு வந்து போடுவதைத் தான் அப்படிச் சொல்கிறார்கள்.
சுத்தமில்லா இடத்தை மட்டுமல்ல சுத்தமாக இல்லாதவர்களையும் ஆங்கிலத்தில் look like something the cat dragged in என்பார்கள். அதாவது ஏன் இப்படி பூனை பாதி தின்ற பின் கொண்டுவரும் செத்த எலி போல இருக்கிறாய் என்பது தான் பொருள்.
look like something the cat dragged in என்பதற்கு dictionary தரும் பொருள் to be very dirty or untidy.
Examples for the usage:
While coming to school you have to be smart. Don't look like something the cat dragged in.
Since morning he is playing without taking bath. See, he looks like something the cat dragged in.
Comments
Post a Comment
Your feedback