ஆலமரத்தில்
அன்றாடம் பறவைகள்.
நேற்று
தானே ஆலம்பழம் சாப்பிட்டோம் என்று இன்று பறவைகள் வராமல் இருப்பதில்லை
அப்படித்தான்
நாங்களும்.
மரத்தில்
பழம் இருந்தால் பறவைகளுக்கு உணவு.
மரம்
வெறுமையானால் பறவைகளும் பட்டினி.
அப்படித்தான்
மன்னனின் செல்வம் எங்களின் வளமை.
மன்னனின்
வறுமை எமக்கும் வறுமை.
பாடல்:
கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
செலவுஆ னாவே கலிகொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
உடைமை ஆகும்அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே.
(புறநானூறு 199)
பாடியவர்: பெரும்பதுமனார்.
திணை: பாடாண் திணை.
ஒருவருடைய
புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை.
பரிசில் கடா
நிலை என்பது பரிசில் வேண்டும் விருப்பத்தை புரவலரிடம் வெளிப்படுத்துவது.
சொல்லும் பொருளும்:
தடவு = பெரிய
சினை = மரக்கொம்பு
நெருநல் = நேற்று
ஆனா –
அமையாது
கலி – ஒலி
புரவு –
பாதுகாப்பு
இன்மை -வறுமை
உரை:
கடவுள் உறையும் ஆலமரத்தின் பெரிய கிளைகளில் இருந்த பழங்களை நேற்று உண்டோம் என்று நினைத்து ஆரவாரமாக ஒலிக்கும் பறவைகள் அம்மரத்தைவிட்டு விலகுவதில்லை.
இரவலர்களும் அப்பறவைகள் போன்றவர்கள்தான்.
இரவலர்களை எதிர்பார்த்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் புரவலர்களின் செல்வம்தான் இரவலர்களின் செல்வம்.
புரவலர்கள் வறுமையுற்றால்
இரவலர்களுக்கும் வறுமைதான்.
குறிப்பு:
Comments
Post a Comment
Your feedback