Skip to main content

ஒற்றைச் செருப்புகள்

 நாம் இப்போது ஒரு ஜோடி செருப்பு வாங்குகிறோம் என்றால் அந்த ஜோடியில் ஒன்று இடது காலுக்கு மற்றது வலது காலுக்கு. 


இடது கால் செருப்பை இடது காலில் தான் போட முடியும்; வலது காலில் போட முடியாது. அது போலத்தான் வலது கால் செருப்பும். 

ஒரு ஜோடி செருப்பு என்று எடுத்துக் கொண்டாலும் இடது காலுக்கு எனத் தனியாகவும் வலது காலுக்கு எனத் தனியாகவும் தனித்தன்மையோடு செருப்புகளின் செய்யப்படுகின்றன.

இது தானே உலக வழக்கம். இதில் என்ன புதுச் செய்தி?


பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்பாக செருப்புகள் செய்யப்படும்போது அவை இடது காலுக்கு என்றும் வலது காலுக்கு என்றும் தனித்தனியாக செய்யப்படுவதில்லை. எந்தச் செருப்பை எந்தக் காலில் வேண்டுமானாலும் போட்டுக் கொள்கின்ற வகையில் ஒரு பொதுத் தன்மையில் அவை செய்யப்பட்டன. 

மிக ஏழ்மையான நிலையில் இருப்பவர்கள் சில நேரங்களில் ஒரு ஜோடி செருப்பு மட்டும் வாங்கி வந்து அதை இரண்டு பேர் ஒவ்வொரு காலுக்கு போட்டுக்கொண்டு வெயிலில் வேலை செய்வதும் வழக்கம். 

 அப்படி வேலை செய்யும்போது இன்று இடது காலில் அணிந்திருந்த அந்தச் செருப்பு நாளை வலது காலில் அணியப்படலாம். இப்படி முதல்நாள் இருந்ததற்கு நேர்மாறாக அடுத்தநாள் இருப்பதை ஆங்கிலத்தில் boot is on the other foot என்று சொல்வார்கள். 


அதாவது முன்பு இருந்த நிலைக்கு நேர் எதிராக இப்போது செய்வதை இப்படிச் சொல்வார்கள். 


அடிக்கடி மாறிக் கொள்பவர்கள், நேற்று பேசியதற்கு மாறாக இன்று பேசுபவர்கள் இவர்களையெல்லாம் தமிழில் பேச்சு வழக்கில் 'பொழுதோட ஒண்ணு வெடியால ஒண்ணுன்னு இருப்பவர்கள் ' என்று சொல்வார்கள். அதாவது நேற்று ஒன்றும் இன்று ஒன்றும் பேசுபவர்கள் என்பது பொருள்.


 இப்போது இந்த ஒற்றைச் செருப்புக் காலம் எல்லாம் யாருக்கும் நினைவில் இல்லை. ஆனாலும் 

boot is on the other foot 

மட்டும் புழக்கத்தில் இருக்கிறது.


boot is on the other foot என்பதற்கு dictionary தரும் பொருள்:

the situation is now the opposite of what it was, especially because someone who was weak now has power.


Examples for the usage:


Till studying 7th standard my son was following my advice but now the boot is on the other foot.


When we were kids we were not allowed to play after 6.30 pm now the boot is on the other foot.




Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...