அரசியலை சாக்கடைக்கு ஒப்பிடுவது வழக்கம். பொதுவாக நல்ல பண்புகள் இருப்பவர்கள் அரசியலில் காணாமல் போவதும் கீழ்த்தரமான மனிதர்கள் கொண்டாடப்படுவதும் அதற்குக் காரணமாகச் சொல்வார்கள். எப்போதாவது நன்றாகப் படித்தவர்கள் அல்லது தன்னலம் இல்லாதவர்கள் அரசியலுக்கு வரும்போது அவர்களை சாக்கடை அரசியலைச் சுத்தப்படுத்த வந்தவர்கள் என்று அடையாளப்படுத்துவது இயல்பு.
ஒரு அருவருப்பான இடம். அதை சுத்தப்படுத்த ஒரு ஹீரோ என்ற உருவகம் கிரேக்கக் கதைகளிலிருந்து வந்தது.
என்ன அந்தக் கிரேக்க புராணக்கதை?
ஆஜியஸ் மன்னனுக்கு குதிரைகள் மேல் ரொம்பவும் விருப்பம். அவன் தொழுவத்தில் 3000 குதிரைகள் இருந்தன. என்ன கொடுமை என்றால் 30 ஆண்டுகளாக அந்தத் தொழுவத்தை யாரும் சுத்தப்படுத்தவில்லை. ஒரு நாள் கவனிக்காமல் விட்டாலே மாட்டுத்தொழுவம் எப்படி இருக்கும் என்பது தெரியும்.
இப்படி 30 ஆண்டுகளாக அருவருப்பான இடமாக உள்ள அந்த இடத்தை யாராவது சுத்தப்படுத்த முடியுமா என்ன?
இந்த தொழுவங்களை சுத்தம் செய்யும் பொறுப்பு ஹெர்குலஸ்ஸிடம் (Hercules) ஒப்படைக்கப்பட்டது. அவன் ஆல்பியா நதியின் போக்கை மாற்றி தொழுவத்துக்கு அனுப்பி வைத்தான்.
தொழுவத்தில் கழுவப்பட்ட அந்த நீர் சாக்கடை போலத் தோன்றினாலும் தொழுவம் சுத்தமாகிவிட்டது.
ஆக, அசுத்தம் நிறைந்த இடங்களை சுத்தம் செய்ய ஒரு ஹெர்குலஸ் அனுப்பி வைக்கப்படுவான் என்பது கிரேக்க புராணம் சொல்லும் செய்தி.
தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ஹெர்குலஸ் மட்டும் வழி மாறிப் போயிருப்பானோ?
ஆக, புரையோடிப் போன அசுத்தமான இடத்தைச் சுத்தப்படுத்த Cleanse the Augean stables என்ற வழக்கைப் பயன்படுத்துவார்கள்.
Example for the usage:
Talking about corruption, the Prime Minister said that he would cleanse the Augean stables in a hundred days.
Comments
Post a Comment
Your feedback