நோய் வந்தால்
மருந்தும் இருக்கும்.
ஒரு பக்கம் நோய் வந்தால்
எங்கிருந்தோ மருந்தும் வரும்.
ஆனால்,
இவளை நினைத்து
நான் கொண்ட நோய்க்கு
இவளே மருந்துமாக இருக்கிறாள்.
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
(திருக்குறள் 1102)
விளக்கம்:
நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback