பாரி மன்னன் இறந்த பின்பு பாரி மன்னனின் மகள்களை மணம் புரிய மன்னன் விச்சிக்கோவிடம் கபிலர் கேட்டுக் கொண்டது இப்பாடல் வழியே...
பாடல் கூறும் செய்தி இதுதான்:
மன்னா இவர்கள் பாரியின் பெண் குழந்தைகள். முல்லைக்கொடி தன்னை பாடாத போதும் அதற்கு தேரையே அளித்த மன்னன் பாரியின் பெண்கள் இவர்கள்.
நான் பரிசு கேட்க வந்தவன்;அந்தணன்.
வாள் திறத்தால் பகைவர்களை வென்ற மன்னனே!
இந்தப் பெண்களை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.
பாடல்:
பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந் துண்ட கருவிரல் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்து சேண்விளங்கி
மழைமிசை அறியா மால்வரை அடுக்கத்துக்
கழைமிசைத் துஞ்சும் கல்லக வெற்ப,
நிணம்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல்
களங்கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்குமணி கொடும்பூண் விச்சிக் கோவே,
இவரே, பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும்பு இருப்பப் பாடாஅது ஆயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்துஓங்கு சிறப்பிற் பாரி மகளிர்
யானே, பரிசிலன் மன்னும், அந்தணன்; நீயே,
வரிசையில் வணக்கும் வாள்மேம் படுநன்;
நினக்கியான் கொடுப்பக் கொண்மதி; சினப்போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே!
(புறநானூறு 200)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டவன்: விச்சிக்கோ.
திணை: பாடாண்.
ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை.
புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.
சொல்லும் பொருளும்:
நிவத்தல் - படர்தல்
பாசிலை -
பசுமையான இலை
பல - பலா.
சேண் -
தொலைதூரம்
மழை - மேகம்
மால் - மலை
அடுக்கம் -
பக்க மலை
கழை - மூங்கில்
கல்லகம் -
மலை
வெற்பு - மலை
செரு - போர்
கறங்கல் -
ஒலித்தல்
மடங்கா - குறையாத
உரை:
மலைநாட்டுத்
தலைவா!
உன்
நாட்டில், மேகங்கள்கூட எட்ட முடியாத அளவுக்கு உயரமான மலைகள் உள்ளன. அம்மலைகளின்
உச்சியில் மூங்கில் காடுகள் உள்ளன. அந்தக் குளிர்ந்த மலைகளில் வளர்ந்த பசுமையான
இலையையுடைய பலாவின் பழத்தைக் கவர்ந்து உண்ட கரிய விரலுடைய ஆண்குரங்கு, சிவந்த
முகத்தையுடைய பெண்குரங்கோடு, மலைச் சிகரத்தில் உள்ள மூங்கிலின் மேல் உறங்கும்.
Comments
Post a Comment
Your feedback