அன்னப் பறவையின் இறகு மென்மையாம்.
அனிச்ச மலரும் கூட அவ்வளவு மென்மையாம்.
அவள் காலடிகள்?
அவள் காலடியைத் தொட்டபின்பு தொட்டுப் பார்த்தேன்
அன்னத்தையும் அனிச்சமலரையும்
அவை எனக்கு நெருஞ்சிமுள் போலத் தான்…
அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
(திருக்குறள்)
அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள்
தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு
மென்மையானவை.
Comments
Post a Comment
Your feedback