வெட்கத்தில் தலைகவிழ்ந்து கொண்டன
அவளைக் கண்டபின்
குவளை மலர்கள்
அவள் கண்கள் போல நாம்
அழகில்லையே என்று.
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
(திருக்குறள் 1114)
விளக்கம்:
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback