ஒரு காட்டில் சிங்கம் ஒன்று அட்டகாசம் செய்துவந்தது. இதனால், எல்லா மிருகங்களும் கூடிப் பேசின. பிறகு, சிங்கத்துடன் சேர்ந்து அமைதியாக வாழலாம் என்று முடிவுசெய்தன.
எல்லா மிருகங்களும் தங்களுக்கு கிடைக்கும் உணவை சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதுபோலவே நடந்துகொண்டிருந்தது.
இப்படியிருக்கையில் ஒரு நாள், சிங்கம் ஒரு பெரிய மானை வேட்டையாடி வீழ்த்தியது. உடனே எல்லா மிருகங்களும் கூடிவிட்டன.
சிங்கம் மானின் இறைச்சியை நான்கு பங்காகப் பிரித்தது. இருப்பதிலேயே சிறந்த பாகத்தை தனக்கென எடுத்துக்கொண்டது. "இது எனக்கு, ஏனென்றால் நான்தான் சிங்கம்" என்று சொன்னது.
பிறகு, அடுத்த பகுதியையும் தனக்கென எடுத்துக்கொண்டது. "இதுவும் எனக்குத்தான் . காரணம் நான்தான் கூட்டத்திலேயே வலிமையானவன்" என்றது.
மூன்றாவது பங்கை எடுத்து தன் பக்கம் வைத்துக்கொண்டு, "இருப்பதிலேயே வீரமானவனான எனக்கு இது" என்றது.
பிறகு நான்காவது பங்கை மற்ற மிருகங்களின் முன்பாக வைத்துவிட்டு, "யாருக்காவது தைரியம் இருந்தால் இதைத் தொடுங்கள் பார்க்கலாம்" என்றது.
பிற மிருகங்கள் ஒன்றும் செய்யமுடியாமல் விழித்தன.
இந்த ஈசாப் கதை தான் Lion’s share என்ற ஆங்கில வழக்குக்குக் காரணம்.
தேர்தல் நேரங்களில் தமிழ் செய்தித் தாள்களில் பெரியண்ணன் மனோபாவம் என்ற வார்த்தையும் ஆங்கிலச் செய்தித்தாள்களில் lion's share என்ற வார்த்தையையும் பார்க்கலாம்.
தேர்தலில் போட்டியிட இடப்பங்கீட்டில் பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளுக்கு இப்படித் தான் இடங்களைப் பங்கிட்டுத் தருகின்றன.
இந்த அடாவடித்தனத்தை தான் இயலாமையில் உள்ள குட்டி அரசியல் கட்சிகள் பெரியண்ணன் மனோபாவம் என்று கூறுவார்கள்.
Lion's share பயன்பாட்டுக்கு சில வாக்கியங்கள்.
Prabhu claimed the lion’s share of the credit for winning the match.
The three brothers were supposed to divide the money equally between themselves, but their elder brother took the lion’s share.
Comments
Post a Comment
Your feedback