ஒரு ஊரில் இருப்பவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
ஊரில் இருக்கக்கூடிய எல்லா நிலமும் பண்படுத்தப்பட்டு சுத்தமாக இருந்தால் அங்கு இருக்கும் ஆண்கள் நல்லவர்கள்.
தெருவெங்கும் குப்பையாகக் கிடந்தால் அங்குள்ள ஆண்கள் கீழ்த்தரமானவர்கள்.
இப்படிச் சொல்லது ஔவையார்.
அவர் எழுதிய புறநானூற்றுப் பாடல் இது.
பாடல் சொல்லும் செய்தி:
நிலமே!
நீ நாடாக இருக்கலாம், காடாக இருக்கலாம், பள்ளமான இடமாகவோ அல்லது மேடான இடமாகவோ கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும், அங்கு வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய். நீ வாழ்க!
(நிலத்தைச் சொன்னது போலத் தோன்றும். ஆனால் அவர் எச்சரித்தது மனிதர்களைத் தான்)
பாடல்:
நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே.
(புறநானூறு 187)
பாடியவர்: ஔவையார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.
Comments
Post a Comment
Your feedback