ஈசாப் கதைகள் படித்திருப்போம்.
கிரேக்கத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்தக் குட்டிக் கதைகள் எல்லா வயதினரையும் கவர்ந்து விடும். இப்போதும் குழந்தைகள் படிக்கும் காக்கா நரிக் கதைகள் எல்லாம் ஈசாப் கதைகளில் இருந்து தோன்றியவை தான். பெரும்பாலும் விலங்குகளே கதைகளில் வரும். ஆனால் மனிதர்களுக்கு அவை பாடம் கற்பிக்கும்.
அதில் ஒரு கதை.
பறந்து வந்த ஈ ஒன்று ஒருவன் தலையின் நெற்றியோரம் வழுக்கைப் பகுதியில் அமர்கிறது. உடனே அவனுக்கு கோபம் வருகிறது. அந்த ஈயைக் கொல்ல வேண்டும் போல ஒரு வெறி. உடனே அருகில் இருந்த அகலமான ஒரு தட்டை எடுத்து டமார் என ஈ ஒட்டி இருந்த இடத்தை அடிக்கிறான். ஈ பறந்து விட்டது. தட்டை அடித்த வேகத்தில் இப்போது தலையில் எரிச்சல் வேறு.
தப்பிப் போன ஈ இப்போது அருகே வந்து அவனிடம் சொன்னது.
நான் உன்னை வலிக்காமல் மெதுவாகத் தொட்டதற்கே என்னைக் கொல்ல முயற்சித்தாய். இப்போது டமாரென உன் தலையில் நீயே அடித்துக் கொண்டாயே அதற்கு உன்னை நீ என்ன செய்யப் போகிறாய்?
என்று கேட்டு விட்டுப் பறந்து சென்றது.
வலி ஒரு பக்கம்; அந்த ஈ கேட்டதால் வந்த அவமானம் ஒரு பக்கம். இதைத்தான் ஆங்கிலத்தில் 'adding insult to injury' என்று கூறுவார்கள்.
இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம். கன்னத்தில் கடித்த கொசு பறந்து சென்றபின்பு 'கொசுவைக் கொல்லாமல் விடமாட்டேன்' என படாரென கன்னத்தில் அறைந்து கொண்டு அந்த வலியோடு அதை யாராவது பார்த்து விட்டார்களா என அவசரமாக அங்கும் இங்கும் பார்ப்போமே அதுவும் 'adding insult to injury' தான்.
An example for the usage:
He was driving on the wrong side of the road. He hit my car and to add insult to injury he started scolding me for the hit.
Comments
Post a Comment
Your feedback