தவறேதும் இல்லை அவர் மேல்
ஆனாலும் ஒரு பொய்க்கோபம் கொள்வேன்
இந்தக் கோபத்தால் தான் அவருக்கு என் மேல் எவ்வளவு பிரியம் என்பது புரிந்தது.
அதனால் இப்போது எனக்கு ரொம்பவும் பிடிக்கிறது.
அவரை மட்டுமல்ல
அவர் மேல் நான் கொள்ளும் இந்தப் பொய்க்கோபத்தையும்...
இல்லை
தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.
(திருக்குறள் 1321)
அவரிடம்
தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு
செலுத்துமாறு செய்ய வல்லது.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback