ஒரு நாட்டுக்கு எது மிக அவசியம்.
நீர்வளம்? இல்லை
நிலவளம்? அதுவுமில்லை.
மன்னன் தான் நாட்டின் உயிர் என்கிறது இந்தப் புறநானூற்றுப் பாடல்.
பாடல் சொல்லும் செய்தி:
ஒரு நாட்டுக்கு நெல்லும் நீரும் உயிரல்ல.
மன்னனையே உயிராக உடையது நாடு.
அதனால்,
இந்தப் பரந்த உலகுக்கு மன்னன் உயிர் போன்றவன் என்பதை அறிந்து கொள்வது படைகளையுடைய ஒரு மன்னனின் கடமையாகும்.
பாடல்:
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.
(புறநானூறு 186)
பாடியவர்: மோசிகீரனார்.
திணை: பொதுவியல்.
எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி .
உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.
Comments
Post a Comment
Your feedback