எத்தனை முறை சொன்னாலும் சிலருக்கு அது கொஞ்சம் கூடப் பயன்படாமல் போயிருக்கும்.
அறிவுரை சொல்லும் போது அக்கறையோ கவனமோ இல்லாததால் தான் சிலரால் எந்த அறிவுரையையும் கேட்டு மனதில் பதிய வைத்துக்கொள்ள முடிவதில்லை.
காரணம், அது மனசுக்குள் போகாமல் இந்தக் காதில் நுழைந்து அந்தக் காது வழியே வெளியே போய் விடுவது தான். கம்பன் அதை விஷயம் தெரிந்தவர்கள் அற்பர்களுக்குச் சொல்லும் அறிவுரை அப்படித்தான் போய்விடும் என்று கூறுவான்.
இராமன் விட்ட அம்புகள் தாடகையின் நெஞ்சில் பாய்ந்து அப்புறம் கழன்று போயின. அவை, அற்பர்களுக்கு அறிஞர்கள் சொன்ன அறிவுரை போல இந்தப் பக்கம் நுழைந்து அந்தப் பக்கம் போய்விட்டன. கல் போன்ற நெஞ்சில் தங்கவேயில்லை.
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது,
அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
பொருள் எனப்போயிற்று அன்றே!
ஆங்கிலத்தில் இதை fall on stony ground என்பார்கள்.
"செவிடன் காதில் ஊதிய சங்கு" என்றும் இதைத் தான் சொல்லுவார்கள்.
fall on stony ground என்பதற்கு dictionary தரும் பொருள்:
fall on stony ground - If a request or a piece of advice falls on stony ground, it is ignored.
Examples for the usage:
I warned Arun about that finance company but it looks like my warning fell on stony ground.
My repeated requests on exam preparations fell on stony ground. What is the use of feeling now?
Thanks useful
ReplyDelete