முன்பெல்லாம் எங்காவது பயணம் போவதu என்றால் பெரும்பாலும் நடந்து தான் போகவேண்டும். அப்போது கையில் ஒரு தடியை எடுத்துச் செல்வார்கள்.
அது எதற்கு?
பயணத்தின்போது கையில் ஒரு தடி எடுத்துக் கொண்டு போகிறவர்கள் எதிர்ப்படும் தீயசக்திகளை அதட்டி விரட்ட முடியும்.
வழியில் முள் கிடந்தால் தூக்கிப் போட்டுவிட்டுப் போகமுடியும்.
தண்ணீர் தேங்கியிருந்தால் அதன் ஆழம் எவ்வளவு என்று காட்டும்.
போகும் வழியில் மரத்திலிருந்து பழம் உதிர்த்துக் கொடுக்கும்.
கடிக்க வருகின்ற நாயிடம் இருந்து காக்கும்.
தனிமையில் போகையில் துணையாய் இருக்கும்.
பயம் தீர்க்கும்.
பாம்பு வந்தால் அடிக்க முடியும்.
முனியதட்டு முட்டூக்கு முன்னீ ரளக்கும், கனியுதிர்க்கும் கவ்வுநாய் காக்கும் - தனிவழிக்குப், பத்திரம தாக்கும் பயந்தீர்க்கும் பாம்படிக்கும், கைத்தலத்தில் தண்டிருந்தக் கால்.
(விவேக சிந்தாமணி)
.
Comments
Post a Comment
Your feedback