நெருங்கும் போது
குளிர்ச்சியாக இருக்கிறது
விலகிச் செல்லும் போது
சுடுகிறது.
எங்கிருந்து பெற்றாளோ
புதுமையான அந்த
நெருப்பை.
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
(திருக்குறள் 1104)
விளக்கம்:
நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையான தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback