ஒரு கவிஞன் தான் கற்பனையில் கண்டு திளைத்த, உலக நடைமுறைக்குப் பொருந்தாத ஒரு தோற்றத்தை அப்படியே கூறி மற்றவர்களை வியக்க
வைப்பது ஒரு வகை உத்தி. இதை அதிசய அணி என்று தண்டியலங்காரம் கூறும்.
எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது
ஆனந்தக்கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே
மனப்படும் ஒரு பொருள்
வனப்புவந்து உரைப்புழி
உலகு வரம் பிறவ நிலைமைத்தாகி
ஆன்றோர் வியப்பத் தோன்றுவது
அதிசயம்
(தண்டி 53)
அதன் தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்து
கூறுகையில் உலக நடைமுறையைக்
கடந்த வகையில் ஆன்றோர்கள் வியந்து
பாராட்ட உரைப்பது அதிசயமென்னும் அணி.
Comments
Post a Comment
Your feedback