புதிதாகத் திருமணமான
பெண் கணவன் வீட்டுக்குப் போய் சில நாட்கள் கழித்துத் தாய் வீட்டுக்கு வருகிறாள்.
தாய் வீட்டோடு
ஒப்பிட கணவன் வீடு ஒன்றும் வசதிவாய்ப்புடையதாக
இல்லை.(
எல்லாம் கண்மண் தெரியாத காதல் மணம் தான்.)
வந்த பெண்ணிடம்
தாய் கணவன் வீட்டைப் பற்றிக் கேட்க அந்தப்
பெண் சொல்லும் பதில் இது.
கணவன் வீட்டுக்குப் பின் புறம் குப்பை கூளம் நிறைந்த கொஞ்சம் நிலம் இருக்கிறது. பயன்படுத்தப்படாமல் கிடக்கும் அங்கே ஒரு குழியில் கொஞ்சம் நீர் தேங்கி இருக்கும். காய்ந்த சருகுகளின் அடியில் மான் குடித்த பின்னர் எஞ்சியிருக்கும் கலங்கிய அந்த நீர் சேரும் சகதியுமாக இருக்கும். அந்த நீரானது, நம் வீட்டுத் தோட்டத்தில் நீ தரும் தேன் கலந்த பாலை விட சுவையாக இருக்கும்.
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைத்
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலை கூவல் கீழ
மான் உண்டு எஞ்சிய கழிலிநீரே .
(ஐங்குறுநூறு)
Comments
Post a Comment
Your feedback