வீட்டிற்கு வரும் விருந்தினரை எப்படி வரவேற்பது என்பதற்கான ஒரு அல்கோரிதம்(algorithm) இது.
1. வியந்து உரைத்தல்
பார்த்து எவ்வளவு நாளாச்சு.
2. நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்.
வீட்டில் எல்லாரும் நல்லாருக்காங்களா?
3.முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல்.
அவர்களைப் பார்த்த சந்தோஷம் கண்ணில் தெரிய வேண்டும்.
4.வீட்டிற்குள் வருக என வரவேற்றல்
உள்ளே வாங்க என்று அழைத்துச் செல்லுதல்
5.எதிரில் நிற்றல்.
அவர் அமரும் வரை அவர் அருகில் நிற்றல்.
6.மனம் மகிழும்படி பேசுதல்
தம்பி இந்த வருடம் எந்த வகுப்பு படிக்கிறான்?
7.அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல்
நீங்க இருங்க. நான் வந்துவிடுகிறேன் என்றுசொல்லாமல் அருகே அமர்தல்
8.விடை பெறும்போது வாயில் வரை தொடர்ந்து செல்லுதல்.
ஹாலில் இருந்தே கும்பிடு போட்டு அனுப்பி வைக்காமல் வாசல்வரைக்கும் கூடவே வரவேண்டும்.
9.முகமன் கூறி வழியனுப்புதல்.
அடிக்கடி வாங்க. அடுத்த முறை குழந்தைகளையும் கூட்டிட்டு வாங்க எனக் கூறி வழியனுப்ப வேண்டும். ' வாங்க ' என்ற சொல்லே விடை கொடுக்கும்போது கூறிய சொல்லாக இருக்க வேண்டும்.
இது காசிக்காண்டம் என்ற நூலில் அதிவீரராம பாண்டியர் பாடிய பாடல் கூறும் செய்திகள்.
பாடல் :
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுறஇருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே.
(அதிவீரராம பாண்டியர்)
Comments
Post a Comment
Your feedback