மழைத் துளிக்கு ஏங்குகின்ற பறவை போல உன் காலடி நிழலை நாடி வந்திருக்கிறேன். என்னை ஆதரி என்று கூறுகிறது இந்தப் பாடல்.
பாடல் கூறும் செய்தி இதுதான்:
மன்னா,
அருவிவிழும் மலை போல முத்துமாலை தவழ விளங்குகிறது உன் மார்பு.
உன் மனைவி மக்களோடு நீ வாழ்க என்று கனவிலும் கூட உன்னை வாழ்த்தினேன்.
சிவபெருமான் போல உன் செல்வாக்கு எங்கும் பரவியிருக்கிறது.
சிறப்பான வெற்றிகள் ஓடு நீயும் உன் புதல்வர்கள் நீண்ட நாள் வாழ்க.
நான் சொந்த பந்தம் இல்லாதவன்.
பக்கத்து நாட்டுக்காரன்.
மழைத்துளிக்கு ஏங்குகின்ற பறவை போல உன் காலடி நிழலுக்கு வந்திருக்கிறேன்.
என்னை
ஆதரித்து அருள வேண்டும்.
பாடல்:
அருவி தாழ்ந்த பெருவரை போல
ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்
கடவுள் சான்ற கற்பின் சேயிழை
மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்
கிண்கிணிப் புதல்வர் பொலிகஎன்று ஏத்தித்
திண்தேர் அண்ணல்! நிற்பா ராட்டிக்
காதல் பெருமையின் கனவினும் அரற்றும்என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்
வேல்கெழு குருசில்! கண்டேன்; ஆதலின்,
விடுத்தனென்; வாழ்க நின் கண்ணி! தொடுத்த
தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்
பணித்துக்கூட் டுண்ணும் தணிப்பருங் கடுந்திறல்
நின்னோர் அன்னநின் புதல்வர் என்றும்
ஒன்னார் வாட அருங்கலம் தந்துநும்
பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
முன்னோர் போல்க இவர் பெருங்கண் ணோட்டம்;
யாண்டும் நாளும் பெருகி ஈண்டுதிரைப்
பெருங்கடல் நீரினும் அக்கடல் மணலினும்
நீண்டுஉயர் வானத்து உறையினும் நன்றும்
இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி
நீடு வாழிய நெடுந்தகை! யானும்
கேளில் சேஎய் நாட்டின்எந் நாளும்
துளிநசைப்
புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கிநின்
அடிநிழல் பழகிய வடியுறை;
கடுமான் மாற! மறவா தீமே.
(புறநானூறு
198)
பாடியவர்: வடமவண்ணக்கன் பேரி சாத்தனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய
நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய
யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று
புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.
சொல்லும் பொருளும்:
வரை = மலை
ஆரம் = மாலை
மணி = பவழ
மணி
கிண்கிணி =
காலணி.
அரற்றுதல் =
கதறுதல்
ஆல் =
ஆல்மரம்
வரைப்பு =
எல்லை
கொண்டி =
கொள்ளை
நெடுநகர் =
பெரிய அரண்மணை.
உரை:
அருவி வீழும்
பெரிய மலைபோல் ஆரத்தோடு விளங்கும் மார்பையுடையவனே!
கடவுள் தன்மை
அமைந்த கற்புடைய உன் மனைவி உன் மீது குறையாத அன்புடையவள். அவள் பெற்ற உன்
புதல்வர்கள் சிறப்புடன் வாழ்க என வாழ்த்துகிறேன்.
வலிய
தேரையுடைய தலைவ!
உன்னைப்
பாராட்டுகிறேன். பரிசில் மீது மிகுந்த விருப்பம் உள்ளதால், கனவிலும் உன் புகழையே
கூறிக்கொண்டிருக்கிறேன்.
வேலையுடைய
வேந்தே!
Comments
Post a Comment
Your feedback