நெஞ்சே,
நினைத்த நேரத்தில்
நீ அவனோடு போய் விடுகிறாய்.
போக முடியாத கண்ணோ
நானும் அவனைப் பார்க்கணும் என்று
என்னைப்படுத்தி எடுக்கிறது.
ஆகவே ,
இனி அவனைத் தேடி
நீ போகும்போது
இந்தக் கண்ணையும்
கூடக் கூட்டிக்கொண்டு போய்விடு!
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.
(திருக்குறள் 1244)
விளக்கம்:
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback