அல்பட்ராஸ்(Albatross) என்பது ஒரு பெரிய பறவை. கடற்கரைப் பகுதிகளில் இப்பறவைகள் காணப்படும்.
கடலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு நம்பிக்கை. என்னவென்றால் இந்த அல்பட்ராஸ் பறவையை தெரிந்தோ தெரியாமலோ கொன்று விட்டால் அது துரதிஷ்டம். அந்த நாள் தீய விளைவுகளைத் தரும் என்று நம்பினர்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கவிதை இதைக் கூறுகிறது.
Samuel Taylor Coleridge எழுதிய ஒரு கவிதை 'The Rime of the Ancient Mariner'. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கவிதை இது.
இது கடல் பயணம் மேற்கொள்ளும் ஒரு குழுவைப் பற்றிக் கூறுகிறது.
அப்போதெல்லாம் கப்பல் பயணம் என்பது காற்றின் உதவியோடு தான் நடந்து வந்தது. கடலில் பயணம் போகும் போது ஒரு அல்பட்ராஸ் பறவையைக் கொன்றுவிடுகிறார்கள். அந்தப் பறவை துடிதுடித்து இறந்து விடுகிறது. பறவை இறந்தவுடன் சூழ்நிலை மாறுகிறது. அதுவரை அடித்து வந்த காற்று உடனே சுத்தமாக நின்றுவிடுகிறது. குடிதண்ணீர் மொத்தமும் காலியாகி விடுகிறது. விபரீதத்தை உணர்கிறார்கள். அந்தப் பறவையைக் கொன்ற குற்ற உணர்ச்சியில் கொன்ற அந்த பறவையைத் தங்களுடைய கழுத்தில் அணிந்து கொள்கிறார்கள். இது ஒருவகையான மன்னிப்புக் கோருதல் போல.
Albatross around the neck என்பதற்கு
a burdon,
a sense of guilt which becomes an obstacle to someone's success.
என்பது dictionary தரும் விளக்கம்.
Example for the usage:
According to my mother, the old car is an albatross around my father's neck.
Comments
Post a Comment
Your feedback