இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
என்று ஒரு பாடல் வரி கேட்டிருப்போம்.
மற்றவர்களுக்காக தியாகம் செய்பவர்களை மெழுகுவர்த்திக்கு ஒப்பிடுவதுண்டு.
தான் படிக்க விரும்பினாலும் தன்னுடைய தம்பி தங்கை படிக்க வைக்க வேலைக்குப் போகின்ற அண்ணனை மெழுகுவர்த்தியாக உருகுகிறான் என்று சொல்வதுண்டு.
ஊன் உறக்கம் இல்லாமல் கடவுளையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்றெல்லாம் இறை அனுபவத்தைப் பாடுவார்கள்.
காதலில் சிக்கிக் கொண்டவர்களும் கூட அப்படித்தான் உருகிப் போவார்கள்.
ஒற்றைத் திரியில் உருகும் மகிழ்ச்சி தன்னைத் தியாகம் செய்கிறது. அப்படி இருக்க இரண்டு புறமும் பற்றி எரிகின்ற மெழுகுவர்த்தி எப்படி இருக்கும்?
பகலிலும் வேலைக்கு போய்விட்டு வந்து இரவிலும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கின்றவர்களை அப்படிச் சொல்வார்கள்.
இந்த இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகுவர்த்தி வாழ்க்கையை burn the candle at both ends என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது தன்னுடைய மொத்த சக்தியையும் செலவு செய்யும் நிலை தான் அது.
Comments
Post a Comment
Your feedback