பெரும் சாம்ராஜ்யம்...
நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்...
ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை...
லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்...
கோவிட் காலத்தில் அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும் என அவர் அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது...
அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது.
உள்ளே தீவிரவாதிகளிடம் சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல் தீயணைப்பு வீரர்கள் அருகே அவர் தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.
தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.
அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்...
இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்...
எளிய மனிதர்களைப் பற்றியே எப்போதும் சிந்தித்தவர்...
பாடுபட்டு உழைக்கும் ஒவ்வொருவரின் இதயதுக்குள்ளும்
என்றும் வாழ்வார் அவர்...
டாடாவாக அல்லாமல் தன் குடும்பத்தில் ஒருவர் போல ஒவ்வொருவரும் அவரை நினைக்கிறார்கள்.
கருணை உள்ள மனிதர்கள் நிறையப் பேர் வாழ்கிறார்கள். பெரும்பணக்காரர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
அவர் பெரும்பணக்காரர்களுள் கருணையும் அன்பும் தேசப்பற்றும் நிறைந்தவர்.
'உள்ளூர்ப் பயன் மரம் பழுத்தற்றால்' என்ற திருக்குறளுக்கு அவர் வாழ்க்கையே பொருளாகிப் போனது.
எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அவர் வாழ்ந்த வாழ்க்கை இனி வரும் தலைமுறைக்கு ஒளி விளக்காக என்றும் நிலைத்திருக்கும்.
Comments
Post a Comment
Your feedback