கோபப்படுகின்றவர்கள் தங்களைச் சுற்றிலும் எதிர்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். உடன் இருப்பவர்கள் கூட அவர்களுடன் இயல்பாகப் பழக அச்சம் கொள்வர்.
அதனால் கோபப்படுகின்றவர் படிப்படியாக மற்றவர்களால் புறக்கணிக்கப்படும் நிலைக்கு ஆளாகிறார்.
கோபப்படும் போது பல நரம்புகள் அதீதமாகச் செயல்படுகின்றன.
அதிகப்படியான கோபத்தால் நரம்புகள் விரைவில் செயல் இழந்து விடுகின்ற நிலை வந்து விடுகிறது.
'சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி' என்று கூறுகிறது திருக்குறள்.
கோபத்தின் இந்த சுட்டெரிக்கும் தன்மையை மனப் பதட்டம் மட்டும் அல்லாமல் உடல் வெப்பநிலை அதிகரிப்பதைக் கொண்டும் உணரலாம். இதயத் துடிப்பு எகிறும் நிலை கூட வரும்.
உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கிறதா என்பதை எப்படிப் பார்ப்போம்? பொதுவாகக் கழுத்துக்குள் தொட்டுப் பார்த்து காய்ச்சல் இருப்பதை கண்டுபிடிப்போம். அது போலவே கோபப்பட்டவுடன் தொட்டுப்பார்க்க வேண்டும்.
கழுத்து, சட்டையின் collar பகுதியில் இருப்பதால், கட்டுப்படுத்த முடியாத அளவு கோபப்படும் நிலையை ஆங்கிலத்தில் hot under the collar என்று கூறுவார்கள்.
hot under the collar என்பதற்கு dictionary கூறும் பொருள்:
hot under the collar- embarrassed or angry about something
Examples for the usage:
We disagree with each other from time to time, and we both get a little hot under the collar.
When I pointed out his mistake in the sum he got hot under the collar.
Comments
Post a Comment
Your feedback