இன்னும் மலராத அரும்புக்குள்
ஒளிந்திருக்கும் பூ வாசம் போல
அவள் புன்னகைக்குள்ளும்
என்னவோ ஒன்று
ஒளிந்திருக்கிறது.
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
(திருக்குறள் 1274)
விளக்கம்:
அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback