பாரி மன்னன் இறந்த பின்பு பாரி மன்னனின் மகள்களை மணம் புரிய மன்னன் விச்சிக்கோவிடம் கபிலர் கேட்டுக் கொண்டது இப்பாடல் வழியே ... பாடல் கூறும் செய்தி இதுதான் : மன்னா இவர்கள் பாரியின் பெண் குழந்தைகள் . முல்லைக்கொடி தன்னை பாடாத போதும் அதற்கு தேரையே அளித்த மன்னன் பாரியி ன் பெண்கள் இவர்கள் . நான் பரிசு கேட்க வந்தவன்; அந்தணன் . வாள் திறத்தால் பகைவர்களை வென்ற மன்னனே! இந்தப் பெண்களை உன்னிடம் ஒப்படைக்கிறேன் . பாடல்: பனிவரை நிவந்த பாசிலைப் பலவின் கனிகவர்ந் துண்ட கருவிரல் கடுவன் செம்முக மந்தியொடு சிறந்து சேண்விளங்கி மழைமிசை அறியா மால்வரை அடுக்கத்துக் கழைமிசைத் துஞ்சும் கல்லக வெற்ப, நிணம்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல் களங்கொண்டு கனலும் கடுங்கண் யானை விளங்குமணி கொடும்பூண் விச்சிக் கோவே, இவரே, பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும்பு இருப்பப் பாடாஅது ஆயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்துஓங்கு சிறப்பிற் பாரி மகளிர் யானே, பரிசிலன் மன்னும், அந்தணன்...