ஜூலை 10, 1806
இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னோடியாக விளங்கிய வேலூர் புரட்சி இன்று காலை 2.30 மணிக்குத் தொடங்கியது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை அகற்ற நடந்த இப் புரட்சியில் பல பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கோட்டை கைப்பற்றப்பட்டு மைசூரின் புலிக்கொடி பறக்க விடப்பட்டது.
ஆனால், காலை 10 மணிக்கு ராணிப்பேட்டையில் இருந்து வந்த பிரிட்டிஷ் உதவிப் படை கடும் போரிட்டு கோட்டையை மீண்டும் கைப்பற்றியது. ஏராளமான இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது தூக்கிலிடப்பட்டனர். கோட்டைப் பகுதியில் 2000 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜூலை 10, 1919
மறைந்த எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு பிறந்த நாள்.
தன்னுடைய குரு மீதுள்ள பற்றினால் பெயரை மாற்றிக்கொண்டவர்கள் வரிசையில் இவரும் ஒருவர். எழுத்தாளர் கு.ப.ரா வின் சீடர் இவர். தன் குருவின் புனைபெயரான கரிச்சான் என்பதை மனதில் கொண்டு தன்னை கரிச்சான் குஞ்சு என்று ஆக்கிக்கொண்டவர் இவர். முறைப்படி வேதங்கள் மற்றும் ஆகமங்கள் பயின்றவர் இவர். சமஸ்க்ருதம், தமிழ் இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றிருந்தவர் இவர்.
ஜூலை 10, 1930
எழுத்தாள இந்திரா பார்த்தசாரதி பிறந்த நாள்.
புகழ் பெற்ற எழுத்தாளரான தி. ஜானகிராமன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் அவரிடம் பயின்ற மாணவர் இவர்.
தமிழ்ப்பேராசிரியராக 40 ஆண்டுகள் டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.
இவர் எழுதிய குருதிப்புனல் என்னும் நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாகும்.
ஷேஸ்பியர் எழுதிய கிங் லியர் நாடகத்தின் தமிழாக்கமாக நாடக வடிவிலேயே தமிழில் எழுதியவர் இவர்.
ஷேஸ்பியர் எழுதிய மற்றொரு நாடகமான கிங் லியர் நாடகத்தை நாடக வடிவிலேயே தமிழில் எழுதி புயல் என்ற பெயரில் வெளியிட்டார் இவர்.
ஜூலை 10, 1951
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிறந்த நாள்.
இயற்பியல் பேராசிரியராக இருந்து அதிமுக்கியமான துறைகளான உள்துறை, ராணுவம் , வேளாண்மை என்று பல துறைகளை நிர்வகித்த ஆளுமை இவர்.
ஜூலை 10, 1965
பெண்களுக்கான முதல் N.C.C. என்சிசி கல்லூரி குவாலியரில் தொடங்கப்பட்டது.
ஜூலை 10, 1991
ரஷ்யாவின் ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக பொதுமக்களால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போரிஸ் எல்ட்ஸ்டின் பதவி ஏற்றார்.
Comments
Post a Comment
Your feedback