ஜூலை 6, 1870
பரிதிமாற் கலைஞர் பிறந்த தினம்.
மதுரை அருகே விளாச்சேரியில் கோவிந்த சிவனார்-லட்சுமி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர் சூரிய நாராயண சாஸ்திரி. பின்னாளில் தன்னுடைய பெயரை பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டவர் இவர் .
‘33 ஆண்டுகளே வாழ்ந்த இவர், அதிக காலம் வாழ்ந்திருந்தால், தமிழ் அன்னை அரியாசனத்தில் அமர்ந்திருப்பாள்’’ என தமிழ்த் தென்றல் திரு.வி.க. இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜூலை 6, 1870
பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டியர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை வெறிநாய்க்கடியால் நோய் வாய்ப்பட்ட 9 வயது யோசப் மைசிட்டர் என்ற சிறுவனைக் கொண்டு வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.
ஜூலை 6, 1885
பிரான்ஸைச் சேர்ந்த லூயீ பாஸ்டியர் (Louis Pasteur) வெறி நாய்க்கடிக்கு 14 நாட்கள் தொடர்ந்து ஊசி மூலம் செலுத்தும் மருந்தைக் கண்டுபிடித்தார்.
தாதாபாய் நௌரோஜி பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜூலை 6, 1928
உலகின் முதல் பேசும் படமான லைட்ஸ் ஆப் நியூயார்க் என்னும் திரைப்படம் நியூயார்க்கில் இன்று திரையிடப்பட்டது.
ஜூலை 6, 1930
பிரபல கர்நாடக சங்கீத வித்துவான் எம்.பாலமுரளிகிருஷ்ணா பிறந்த தினம்.
’கவிக்குயில்’ படத்தில் இளையராஜா இசையில் ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான்’ ...
திருவிளையாடல் படத்தில் K.V. மகாதேவன் இசையில் வரும் 'ஒரு நாள் போதுமா' பாடல்...
என காற்றில் காலமெல்லாம் வாழும் குரலுக்குச் சொந்தக்காரர் இவர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பலருக்கு இசை கற்றுக் கொடுத்த ஆசிரியர் பால முரளிகிருஷ்ணா.
பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் உள்ளிட்ட எத்தனையோ விருதுகள் பெற்ற போதும் புகழுக்கு மயங்காத மாமேதை இவர்.
ஜூலை 6, 1935
சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.
ஜூலை 6, 1935
தலாய் லாமா என்று அழைக்கப்படும் திபெத்திய பௌத்தத்தின் 14-ஆவது தலாய் லாமா இன்று வடகிழக்கு திபெத்தின் அம்டோவில் உள்ள தக்ட்ஸரில் அமைந்துள்ள ஒரு சிறிய குக்கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
ஜூலை 6, 1944
காந்தியை தேசத்தந்தை என்ற அடைமொழியுடன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் முதன் முதலாக இன்று தான் அழைத்தார்.
ஜூலை 6, 1947
சோவியத் யூனியன் ஏகே-47 துப்பாக்கிகளை அறிமுகப்படுத்தியது.
ஜூலை 6, 1947
தமிழில் நவீனக் கவிதைகளில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர் ஆத்மாநாம் இன்று மறைந்தார்.
மனச் சிதைவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
ஜூலை 6, 1968
குழந்தை இலக்கிய முன்னோடி மயிலை சிவமுத்து இன்று காலமானார்.
ஜூலை 6, 1986
இந்தியாவின் ரயில்வே அமைச்சராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த ஜகஜீவன் ராம் காலமானார்.
ஜூலை 6, 2002
ரிலையன்ஸ் நிறுவனங்களின் ஆணிவேராக விளங்கும் திருபாய் அம்பானி இன்று மறைந்தார்.
ஜூலை 6, 2011
இலங்கைத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி மறைந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback