ஜூலை 31,1658
ஔரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசராக முடிசூடினார்.
ஜூலை 31,1805
தீரன் சின்னமலை மறைந்த நாள்.
ஜூலை 31,1874
சதாவதானி செய்குத்தம்பி
பாவலர்
பிறந்த நாள்.
முஸ்லீம் புலவரான இவர் கதராடையும் காந்தி குல்லாயும் அணிந்து, விடுதலை உணர்வைப் பரப்பியவர். இசுலாமிய மித்திரன் எனும் இதழை நடத்தி வந்தார். சீறாப்புராணத்துக்கு உரை எழுதினார்.
அந்தாதிகள், கோவைகள், பாமாலை, மஞ்சரி, நீதி வெண்பா மற்றும் பல்வேறு உரைநடை நூல்களையும், ஆனந்தக் களிப்பு எனும் மொழிபெயர்ப்பையும், சாற்றுக் கவிகள், வாழ்த்துக்கவிகள், சிலேடைக் கவிகள், சீட்டுக் கவிகள் எனப் பல பாக்களையும் அளித்தவர் இவர்.
நபிகள் நாயக மான்மிய மஞ்சரி உள்ளிட்ட பல கவிதை நூல்களையும், பல வசன நடை காவியங்களையும் எழுதியவர்.
ஜூலை 31,1912
இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்தவரும் 20 ஆண்டுகள் அதன் பொதுச்செயலாளராக இருந்தவருமான ஆலன் ஆக்டேவியன் ஹியூம் இன்று பிரிட்டனில் தன் 84 வது வயதில் காலமானார்.
ஜூலை 31,1928
எம்.ஜி.எம் (MGM) என்று குறிப்பிடப்படும் மெட்ரோ கோல்ட்வின் மேயர் என்னும் திரைப்படக் கம்பெனியின் ஒவ்வொரு படத்தின் ஆரம்பத்திலும் ஒரு சிங்கம் தோன்றி கர்ஜித்து விட்டுச் செல்லும். அவர்களது சின்னமான இச் சிங்கம் தென்கடல்களின் வெள்ளை நிழல்கள் எனும் அவர்களது படத்தில் இன்று தான் முதன் முதலில் தோன்றி கர்ஜித்தது.
ஜூலை 31,1948
கல்கத்தா அரசு போக்குவரத்துக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது இந்தியாவில் ஒரு மாநில அரசு துவக்கிய முதல் சாலை போக்குவரத்துக் கழகம் இது தான்.
ஜூலை 31,1954
திரைப்பட நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன் பிறந்த நாள்.
ஜூலை 31,1965
தன்னுடைய ஹாரி பாட்டர் நாவல்கள் மூலம் உலகப்புகழ்பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் பிறந்த நாள்.
ஜூலை 31,1981
சூரிய ஆற்றலினால் இயங்கும் காரைக் கண்டுபிடித்த ஆலன் ஃப்ரீமான் அதை இன்று ஓட்டிக் காண்பித்தார்.
ஜூலை 31,1997
முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் விமான விபத்தில் மறைந்தார். இவர் மகன் தங்கம் தென்னரசு தற்போது தமிழக அமைச்சராக உள்ளார்.

Comments
Post a Comment
Your feedback