திருமணம் என்பது இன்று நாளை என்றில்லாமல் காலங்காலமாக நின்று நிலைத்திருக்கும் பந்தம்.
எனவேதான் திருமண விழா என்பது தெய்வீக விழாவாகக் கருதப்படுகிறது.
ஆண்டாள் -நாரணன், தெய்வானை- முருகன், மீனாட்சி- சொக்கநாதர், சீதை -ராமன் என தெய்வத் திருமணங்கள் திருமண விழாவில் குறியீடுகளாக என்றும் நிறைந்திருக்கின்றன.
நாரணனையே நினைத்து அவனையே கைப்பிடித்ததால் பிடித்த மணமகனையே திருமணம் செய்வதற்கு ஆண்டாள் திருமணம் குறியீடாகிறது.
மீனாட்சியை மணந்த சொக்கநாதர் மதுரையிலேயே தங்கி இருப்பதால் வீட்டோடு மாப்பிள்ளை திருமணத்திற்கு மீனாட்சி சொக்கநாதர் திருமணம் குறியீடாகிறது.
வாழ்க்கை என்றால் இன்பமும் துன்பமும் கலந்ததுதான்; இன்பத்திலும் சரி , துன்பத்திலும் சரி ; அரண்மனை வாழ்க்கையிலும் சரி, ஆரணிய வாழ்க்கையிலும் சரி இணைபிரியாத நிலையின் குறியீடாக சீதை -ராமன் திருமணம் கருதப்படுகிறது.
இந்தத் தெய்வத் திருமணங்களைக் காட்டி பெண்ணின் சகோதரன் அப்பெண்ணிடம் உனக்கு எப்படி மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்பதாக அமைந்தது இந்தப் பாடல்.
பெண்ணின் சகோதரனது கனவை எல்லாம் அதில் காண முடியும்.
தன் தங்கைக்கு குழந்தை பிறந்தபின் அண்ணன் என்ற உறவு குழந்தையை மையமாகக் கொண்டு 'மாமன்' என்றாகி விடுகின்ற நம் பண்பாட்டையும் போகிற போக்கில் அந்தப் பாடல் காட்டும்.
மல்லிகை முல்லை
பொன் மொழி கிள்ளை
அன்புக்கோர் எல்லை
உன்னைப் போல் இல்லை
பொன் வண்ண ரதம் ஏறி
இம் மண்ணில் எங்கும் ஓடி
நல் அன்பு துணைத் தேடி
நான் தருவேன்
சூடிக் கொடுத்தாள் பாவை படித்தாள்
சுடராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்
கன்னித் தமிழ் தேவி
மைக் கண்ணன் அவள் ஆவி
தன் காதல் மலர் சூடி
மாலையிட்டாள்
தோகை மீனாள்
பூவை ஆனாள்
சொக்கேசன் துணையோடு
ஊர்கோலம் போனாள்
மாலை கண்டாள் கோவில் கொண்டாள்
மாணிக்க மூக்குத்தி ஒளி வீச நின்றாள்
தென்றல் தொட்டு ஆட கண் சங்கத் தமிழ் பாட
தன் மக்கள் வெள்ளம் கூட காவல் கொண்டாள்
மாலை சூடி வாழ்ந்த வேளை
வன வாசம் போனாலும் பிரியாத சீதை
ராம நாமம் தந்த ராகம்
லவனாக குசனாக உருவான கீதம்
மாமன் என்று சொல்ல
ஒரு அண்ணன் இல்லை அங்கே
அந்த அண்ணன் உண்டு இங்கே
அள்ளி வழங்க
(கண்ணதாசன்)
Comments
Post a Comment
Your feedback