ஜூலை 24,1911
The Indian Institute of Science (IISC) பெங்களூரில் இன்று தான் தொடங்கப்பட்டது. General and Applied Chemistry மற்றும் Electro technology ஆகிய இரு துறைகளுடன் இன்று தொடங்கப்பட்டது.
ஜூலை 24,1924
தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதன் பிறந்த நாள்.
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போன்ற பல புகழ்பெற்ற பாடல்களைப் பாடியவர் திருச்சி லோகநாதன்.
'பூங்கதவே தாள் திறவாய்' என்ற பாடலைப் பாடிய தீபன் சக்ரவர்த்தி இவர் மகன்.
பக்திப் பாடல்கள் மூலம் புகழ்பெற்ற T.L.மகாராஜனும் இவர் மகன் தான்.
ஜூலை 24,1945
விப்ரோ கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் அசிம் பிரேம்ஜி பிறந்த நாள்.
ஜூலை 24,1953
திரைப்பட நடிகை ஸ்ரீவித்யா பிறந்த நாள்.
ஜூலை 24,1969
நிலாவில் இறங்கிய அப்பல்லோ 11 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
ஜூலை 24,1991
இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.

Comments
Post a Comment
Your feedback