பட்டம் விடுவது குழந்தைத்தனமானதா? அல்லது வீர விளையாட்டா?
முன்பெல்லாம் பட்டம் விடுவது குட்டிப் பையன்களுக்கான விளையாட்டு என்று தான் கருதப்பட்டது.
இப்போது யாரெல்லாம் பட்டம் விடுகிறார்கள் என்று பார்த்தால் வயதா வயோதிகமா என்று முடிவுக்கு வர முடியாது.
எந்த வேலையையும் புரிந்து கொண்டு சமயோசிதமாக செய்யத் தெரியாதவர்களை 'போ! நீ பட்டம் விடத் தான் லாயக்கு' என்று திட்டித் துரத்திய காலமும் இருந்தது.
'போய்ப் பட்டம் விடு' என்றால் தொந்தரவு செய்யாமல் இடத்தைக் காலி பண்ணு என்பதாகப் புரிந்து கொள்ளலாம்.
கொஞ்சம் சீரியஸ் ஆசாமிகள் யாரும் பட்டம் விடுவதில்லை. 'பட்டம் விடுவது அற்பத்தனமானது' என்பது அவர்களின் எண்ணம்.
'Go fly a kite' என ஆங்கிலத்தில் ஒரு மரபுத்தொடர் இருக்கிறது. இதற்கும் கூட இதே பொருள் தான். அதாவது 'தொந்தரவு செய்யாமல் வெளியே போய்விடு ' என்பது தான் செய்தி
எவ்வளவு சொல்லிக்கொடுத்தாலும் எதுவும் புரிந்துகொள்ளாமல் அப்படியே உட்கார்ந்திருப்பவர்கள் ' 'போ, போய் டெல்லி எருமை வங்கித் தரச் சொல்லி மேய்' என்ற ஆசிரியர்களின் வசவுகளுக்கு ஆளாவதுண்டு.
ஏனென்றால் எருமை தானாகவே ஒரு இடத்தில் நிதானமாக நின்று வயிறு நிரம்ப மேய்ந்து கொள்ளக்கூடிய சாதுர்யம் மிக்கது. தன்னை மேய்க்கிறவனின் புத்திக் கூர்மையைப் பற்றி எந்த எருமையும் கவலைப்பட்டதாக இது வரை செய்திகள் இல்லை.
Go fly a kite என்றாலும் எருமை மேய்க்கத் தான் லாயக்கு என்றாலும் செய்தி என்னவோ ஒன்று தான்.
' நீ இந்த வேலைக்கு லாயக்கில்லாதவன். உன்னால் இதைக் கற்றுக் கொள்ள முடியாது' என்பது தான் அது.
Comments
Post a Comment
Your feedback