ஜூலை 27,1876
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பிறந்த நாள்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் சொற்பொழிவுகளும், உரைநடைகளும் புகழ் பெற்றவை. 'கவிமணியின் உரைமணிகள்' என்ற தலைப்பில் அவை நூல் வடிவம் பெற்றுள்ளன.
உமார்கய்யாம், ஆசியஜோதி ஆகியன இவரது மொழிபெயர்ப்புப் பாடல்கள். மருமக்கள் வழி மான்மியம் எனும் இவரது கவிதை நூல் புகழ் பெற்ற ஒன்றாகும். கவிதைக்கு இலக்கணம் சொன்னவர் கவிமணி.
கவிதை எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை அவரின் இந்தக் கவிதை.
உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை.
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.
ஜூலை 27,1877
நவீன அணுக்கொள்கையின் தந்தை எனக் கருதப்படுகின்ற ஜான் டால்டன் மான்செஸ்டரில் காலமானார்.
ஜூலை 27,1879
நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த நாள்.
வ.உ.சி.,யால் 'தமிழ்க் கப்பல்' என்று வர்ணிக்கப்பட்டவர் நாவலர் சோமசுந்தர பாரதியார்.
வழக்கறிஞராகப் பணியாற்றி மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்த போதும் வ.உ.சி.,யின் அழைப்பை ஏற்று மாதம் 100 ரூபாய் ஊதியம் பெற்று கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்தார். தேசப்பற்று காரணமாக அவர் அதைச் செய்தார்.
ராஜாஜி இந்தியை தேசிய மொழி என்ற போது, நாவலரோ 'இந்தி தேசிய மொழியா' என்று கேள்வி எழுப்பி புத்தகம் வெளியிட்டார். சிறிய நூல் என்றாலும் அது பெரிய அளவில் அப்போது பாதிப்பை ஏற்படுத்தியது.
ஜூலை 27,1907
சிறுகதை ஆசிரியர் மௌனி பிறந்த நாள்.
மணிக்கொடி பத்திரிக்கையும் குறிப்பாக பிஎஸ் ராமையாவும் தான் எஸ்.மணி என்று சுகவாசியாக இருந்த சிறுநகர இளைஞன் மௌனி என்ற எழுத்தாளராக மாறக் காரணம்.
அவர் எழுதிய எல்லாச் சிறுகதைகளையும் படிக்க வெறும் இரண்டு மணி நேரம் போதும். இவ்வளவு குறைந்த படைப்புகளைத் தந்த போதும், 20ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் எல்லாத் தமிழ் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் தவறாமல் மௌனியைக் குறிப்பிடுகிறார்கள்.
அது தான் அவர் எழுத்தின் வலிமை.
மௌனி ஒன்றும் பண்டிதர் போன்று தமிழ் படித்தவர் அல்ல. அவர் படித்தது கணக்கு மட்டும் தான்.
அவர் அறிந்த அன்றாட வாழ்க்கைத் தமிழ் தான் அவருடைய இலக்கியத் தமிழும்.
அன்றாட மொழி நடைக்கு விசேஷ பரிமாணங்களை அளித்து எழுதியது தான் மௌனி எழுத்தின் சிறப்பம்சம்.
1985 ஜூன் மாதம் 7 ஆம் தேதி அவர் மறைந்தார்.
ஜூலை 27,1963
புகழ் பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகி சின்னக்குயில் சித்ரா பிறந்த தினம்.
ஜூலை 27,1963
தமிழறிஞர் மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் ச.து.சு.யோகி மறைந்த நாள்.
ஜூலை 27,1987
இந்தியப் பறவையியல் ஆராய்ச்சியாளர் சலீம் அலி மறைந்த தினம்.
ஜூலை 27,2016
அப்துல் கலாம் மறைந்த நாள்.
ஜூலை 27,2016
கவிஞர் ஞானக்கூத்தன் மறைந்த தினம்.

Comments
Post a Comment
Your feedback