ஜூலை 7, 1854
ஓம் விதியை வகுத்தளித்த ஜெர்மனி விஞ்ஞானி ஜார்ஜ் சைமன் ஓம் இன்று காலமானார்.
ஜூலை 7, 1859
இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்.
ஜூலை 7, 1896
இந்தியாவில் திரைப்படம் முதன்முதலாக இன்று தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜூலை 7, 1905
ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்து வங்காள பிரிவினை கர்சன் பிரபுவால் அறிவிக்கப்பட்டது.
ஜூலை 7, 1908
வ உ சிதம்பரம் பிள்ளை மீதும் சுப்பிரமணிய சிவா மீதும் பிரிட்டிஷ் அரசால் தொடுக்கப்பட்ட ராஜ துரோகம் குற்றச்சாட்டு விசாரணைக்கு பின்பு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சுப்பிரமணிய சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் வ உ சிதம்பரம் பிள்ளைக்கு அந்தமான் தீவில் உள்ள சிறையில் 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிதம்பரம் பிள்ளைக்காக மகாகவி பாரதியார் நீதிமன்றம் வந்து சாட்சியம் அளித்தார்.
இவ்வளவு கொடுமையான தண்டனை பெற சிதம்பரனார் பேச்சு தான் காரணம்.
அப்படி அவர் பேசியது என்ன ?
" நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டோம் என்று தெரிந்தாலே ஆங்கிலேயர் மூட்டை முடிச்சுடன் வெளியேறி விடுவார்கள் அவர்கள் ஐம்பதாயிரம் பேர் தான் நாம் வன்முறையை பின்பற்ற நினைத்தால் மிக எளிதாக அவர்களை வெளியேற்றி விடலாம் ஆனால் நமது வழி அறவழி வன்முறையில் எப்போதும் இறங்கக்கூடாது பிரிட்டிஷ் பொருட்களை வாங்காமல் புறக்கணித்தால் அவர்கள் தாமாகவே வெளியேறி விடுவார்கள்"
இது தான் வ.உ.சி பேசிய பேச்சு.
இதற்குத் தான் 40 ஆண்டுகள் அந்தமான் தீவில் கடுங்காவல் தண்டனை. இது தான் அன்றைய ஆங்கிலேயர்களின் நீதிமுறை.
ஜூலை 7, 1943
இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த நாகேந்தர் சிங் தூக்கிலிடப்பட்டார்.
ஜூலை 7, 1944
இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த ராமுத் தேவர் சென்னை சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
ஜூலை 7, 1962
நடிகை வடிவுக்கரசி பிறந்த நாள்.
ஜூலை 7, 1994
எழுத்தாளரும் கவிஞருமான கா.மு. ஷெரீப் இன்று காலமானார்.
ஜூலை 7, 2006
அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர் ஜி.வெங்கடசாமி மறைந்தார்.

Comments
Post a Comment
Your feedback