ஜூலை 18, 1857
சென்னைப் பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்கள் ஆகியவை இன்று நிறுவப்பட்டன.
ஜூலை 18, 1898
கதிரியக்கமுடைய ஒரு தனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு போலோனியம் என்று பெயரிட வேண்டும் என்றும் மேரி கியூரியும் அவரது கணவர் பியாரி கியூரியும் பாரிஸ் அகாடமி ஆப் சயின்ஸ்க்கு அறிவித்தனர்.
ஜூலை 18, 1918
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் முதல் குடியரசுத் தலைவரும் தன் வாழ்நாளில் 27 வருடங்களை சிறையில் கழித்தவருமான நெல்சன் மண்டேலா இன்று தான் பிறந்தார்.
ஜூலை 18, 1925
ஹிட்லரின் 'மெயின் காம்ப்' என்னும் நூல் வெளியிடப்பட்டது.
ஜூலை 18, 1968
இன்டெல் நிறுவனம் மவுண்ட் கலிபோர்னியாவில் இன்று நிறுவப்பட்டது.
ஜூலை 18, 1974
தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் தனி முத்திரை பதித்த எஸ். வி. ரங்கராவ் மறைந்த தினம்.
தன்னுடைய உண்மையான வயதை விட அதிகமான வயது கதாபாத்திரங்களிலேயே நடித்த பெருமைக்குரியவர் அவர்.
ஜூலை 18, 2013கவிஞர் வாலி மறைந்த தினம்.
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்.
- வாலி
All my desires I want to tell, go untold,
All the instants I open to tell, the shyness sets in.
All the day my legs walk on his footprints,
Throughout, only my thoughts fill my eyes, don't know why.

Comments
Post a Comment
Your feedback