ஜூலை 4,1826
அமெரிக்க விடுதலை பிரகடனத்தை தயாரித்தவரும் மூன்றாவது அமெரிக்க ஜனாதிபதியுமான தாமஸ் சபர்சன் இன்று காலமானார்.
ஜூலை 4,1865
உலகப் புகழ்பெற்ற நாவலான ஆலிஸின் அற்புத உலகம் (Alice in Wonderland) வெளியிடப்பட்டது.
அச்சு இயந்திரத்தின் மூலம் அச்சிடப்பட்ட முதல் செய்தித்தாள் இன்று வெளியானது. அது நியூயார்க் ட்ரிப்பியூன் (The New York Tribune) செய்தித்தாள்.
ஜூலை 4, 1902
விவேகானந்தர் தனது 39ஆம் வயதில் இன்று மறைந்தார்.
அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் இராமகிருஷ்ணமடம் இன்று உலகம் முழுவதும் பல கிளைகள் கொண்டு மக்களுக்கான பணியில் ஈடுபட்டுவருகின்றன.
ஜூலை 4, 1943
இன்று சிங்கப்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய இராணுவத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார். அதைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது தான் "Give me blood, I will give you freedom" என்று முழங்கினார். அது தான் இன்றும் நிலைத்திருக்கும் புகழ் பெற்ற வாசகமாக விளங்குகிறது.


Comments
Post a Comment
Your feedback