பிறந்த குழந்தைகள் பள்ளிக்குப் போகும் முன்பே இப்போதெல்லாம் rhymes கற்றுக் கொள்கின்றனர். குழந்தையை தொட்டிலுக்குள் வைத்து விட்டு, மொபைல் போனில் rhymes பாட வைத்து அதையும் தொட்டிலுக்குள்ளேயே வைத்துவிட்டால் தாலாட்டுப் பாட்டெல்லாம் அவசியப்படாத அளவுக்கு rhymes ஆதிக்கம் செலுத்துகிறது.
இன்றைய தேதியில் அங்கிங்கெனாதபடி உலகத்தின் எல்லா மூலைகளில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் சொல்லி வைத்தாற்போல சில rhymes பாடுகிறார்கள் அதாவது அவர்களுக்கு பாடக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
அந்த லிஸ்டில் உள்ள சில rhymes இவை.
Baa,Baa Black sheep
Ding Dong Bell
Cock a Doodle Doo
Sing a song of six pence
Hickory Dickory Dock
Humpty Dumpty sat on a wall
Jack and Jill
Little Jack Horner
One, two buckle my shoe
Pussy cat, Pussy cat where have you been?
Twinkle, Twinkle, Little Star
இந்த rhymes தான் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்தார்கள்?
யார் சொல்லி இப்படிப் பாடிக்கொண்டிருக்கின்றன ஊரில் உள்ள எல்லாக் குழந்தைகளும்?
அதெல்லாம் ஒரு மரபு.
பாதை இல்லாத இடத்தில் முதலில் நடந்து போனவர்கள் போனது தான் பாதை. அந்தப் பாதையில் போவது அடுத்து வரும் மற்றவர்களுக்கு வசதி என்பது கூடக் காரணமாக இருந்திருக்கலாம்.
அந்தப் பாட்டுக்களின் மெட்டு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்துப் போனதும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம்.
எத்தனை வருஷமாக இந்த rhymes குழந்தைகளின் வகுப்பறைக்குள் சாம்ராஜ்யம் நடத்திவருகின்றன?
Baa,Baa Black sheep இன்று நேற்று வந்ததல்ல. இருநூற்று எண்பது வருஷமாக இது பாடப்படுகிறது.
Tommy Thumb's Pretty Song என்று ஒரு புத்தகம் 1744 லில் வெளிவந்தது. அதில் தான் இந்தப் பாட்டு இருந்தது.
இந்தப் பாட்டு மட்டுமல்ல,
Sing a song of six pence
Hickory Dickory Dock
இரண்டும் இதே புத்தகத்தில் இருந்தவை தான்.
இதை விட ஆச்சரியமான விஷயம் Cock a Doodle Doo தான். 1606 லிருந்து இந்தப் பாட்டு இருக்கிறதாம். அதாவது இந்தப் பாட்டைப் பாடிய முதல் குழந்தை இன்று இருந்திருந்தால் அந்தக் குழந்தைக்கு(?) 419 வருஷம் 4 மாசம் ஆகியிருக்கும்.
Ding Dong Bell
Jack and Jill
இரண்டுக்கும் ஒரே வயசு தான். இரண்டும் Mother Goose's Melody என்ற புத்தகத்தில் பிறந்தவை. அந்தப் புத்தகம் 1765 இல் வந்தது.
இந்தப் பாட்டுக்கெல்லாம் பிறகு வந்தது தான் Goosy Goosy Gander.
1784 லில் வந்தது இது.
இதற்கடுத்து 1803 இல் Humpty Dumpty sat on a wall வந்தது.
இந்த வரிசைலயே ரொம்ப லேட்டஸ்ட் என்றால்
One, two buckle my shoe
Pussy cat, Pussy cat where have you been?
இரண்டும் தான்.
இந்த இரண்டும் 1805 இல் வந்த
Songs for the Nursery என்ற புத்தகத்தில் இருந்தவை.
இந்த எல்லா rhymes ம் உலகம் பூராவும் பாடப்பட்டாலும் இந்த rhyme இன்னும் ரொம்ப famous.
அது தான்,
Twinkle, Twinkle, Little Star
How I wonder what you are?
1783 இல் பிறந்த Jane Taylor எழுதிய The way to be Happy புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது இது.
Comments
Post a Comment
Your feedback