ஜூலை 14,1789
பிரெஞ்சுப்புரட்சி தொடங்கிய நாள் இன்று.
ஜூலை 14,1867
ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் இன்று டைனமைட்டின் செயல் விளக்கத்தைச் செய்து காட்டினார்.
ஜூலை 14,1929
பொறியாளரும் தமிழறிஞருமான வா. செ. குழந்தைசாமி பிறந்த நாள்.
ஜூலை 14,1964
சுவாமி சிவானந்தர் மறைந்த தினம்.
ஜூலை 14,2015
திரைப்பட இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் மறைந்த நாள்.
அப்போதெல்லாம் திரையிசை என்றால் அது முழுக்க முழுக்க பாரம்பரிய இசையான கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு, கிளாஸிக்கலாக இருந்த காலம்.
அப்படி இருந்த திரையிசையை, கொஞ்சம் மாற்றி லைட் கிளாஸிக்கலாகவும், கொஞ்சம் வெஸ்டர்னைஸாகவும் ராக அடிப்படை மாறாமல் அனைவரும் விரும்பிக் கேட்கும் வகையில் மெல்லிசையாகத் தந்து வெற்றி கண்டவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
அதனாலேயே மெல்லிசை மன்னர் என்ற அடைமொழியால் அவர் அழைக்கப்பட்டார்.
"நீராரும் கடலுடுத்த" என்று துவங்கும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.வி.
"எம்எஸ்வி.யை சந்திப்பதற்கு முன் எனக்கு சோற்றுக்கே வழியில்லை. அவரை சந்தித்த பின் எனக்கு சாப்பிட நேரமில்லை" என்று கவிஞர் வாலி ஒரு முறை மேடையில் சொன்னார்.
மறைந்த ஷெனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லா கான் கூட எம்.எஸ்.வி இசையில் ஷெனாய் வாசித்திருக்கிறார்.
"பாலும் பழமும்" திரைப்படத்தில் வரும் "ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்" என்ற பாடலில் ஒலிக்கும் ஷெனாய் இசை பிஸ்மில்லாகானின் ஷெனாய் இசை தான்.
கவிஞர் கண்ணதாசன்- எம்.எஸ்.வி கூட்டணி ஒரு இசை ராஜாங்கமே நடத்திவந்தது.
கண்ணதாசன் பிறந்த நாளும் இவர் பிறந்த நாளும் ஒரே நாள்.
1928-ஜூன் 24 அன்று பிறந்த அவர், இன்று மறைந்தார்.

Comments
Post a Comment
Your feedback