திருச்செந்தூர் கோயில் சங்க காலத்தில் இருந்ததை அகநானூறு (பாடல் 266) கூறுகிறது.
இந்தக் கோயில்மேல் இருந்த திருமணி விளக்கு கலங்கரை விளக்கம் போல் இருந்ததாகக் கருதப்படுகிறது.
பட்டை தீட்டிய மணிகளுக்கு நடுவில் விளக்கை வைத்து கலங்கரை விளக்கு என்று பிற்காலத்தில் கூறினர்.
இக்காலத்தில் பட்டடைக் கண்ணாடிக்குள் விளக்கை வைத்து கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்.
திருச்செந்தூர் கோவில் சங்க காலத்தில் கடற்கரையை நோக்கி கிழக்கு முக வாயிலுடன் இருந்திருக்க வேண்டும். ஆயினும் இக்காலத்தில் கிழக்குமுகமாக வாயில் இல்லை. கடல் அரிப்பால் சங்க காலக் கோயில் அழிந்துவிட்டது.
ஆயினும் பண்டைய மரபுப்படி கிழக்கு நோக்கிய வாயில் இல்லாவிட்டாலும் திருச்செந்தூர் முருகன் கிழக்குத் திசை நோக்கியே இன்றும் உள்ளான் என்பது கவனிக்கத்தக்கது.
திருச்செந்தூர் கோவிலில் இருந்த இந்த திருமணி விளக்கு கலங்கரை விளக்கமாக கடலில் செல்பவர்களுக்கு உறுதுணையாக இருந்ததால் "செட்டியார் கப்பலுக்கு செந்தூரானே துணை" என்ற ஒரு பழமொழி இன்றும் வழங்கி வருகிறது.
-பி.எல்.சாமி
Comments
Post a Comment
Your feedback