12 சூலை 1928 –
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான மு.அனந்தகிருஷ்ணன் பிறந்த நாள்.
தற்போது இன்ஜினியரிங் சேர்க்கைக்கு இன்டர்நெட் வழியாக நடக்கும் ஒற்றைச் சாளர முறையை (Single Window System) அறிமுகப்படுத்தியவர் இவர் தான்.
அதற்கு முன்பு ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியே விண்ணப்பம் வாங்கி தனித்தனியே விண்ணப்பித்து மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருந்த மாணவர்களுக்கு இவர் வழங்கிய தீர்வு எந்தக் காலத்துக்கும் மறக்க முடியாத ஒன்று.
இப்போதெல்லாம் வீட்டிலிருந்து கொண்டே பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்ய முடிகிறது என்றால் அதற்கான முதல் புள்ளி இவர் வைத்ததுதான்.
பத்மஸ்ரீ விருது பெற்றவர் இவர்.
திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் நா. முத்துக்குமார் பிறந்த நாள்.
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்
என்று மகளின் அன்பை ரசிக்கும் அப்பாவுக்கு எழுதிய பாட்டால் தேசிய விருதை மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான இதயங்களையும் வென்றவர்.
கவனம் பெறாமல் இருந்த தந்தையின் அன்புக்கு ,
'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டுப் பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே'
என்று வார்த்தைகளில் வடிவம் தந்தவர் இவர்.
வாழ்ந்ததென்னவோ கொஞ்சகாலம் தான் ...
அந்தக் கொஞ்ச காலத்துக்குள் எப்போதும் நிலைத்திருக்கும் பாடல்களை தந்து மறைந்தவர்.
ஜூலை 12,1997
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடிக்கு 1993 ஆம் ஆண்டிற்கான ராமன் மேகஸஹாய் விருது வழங்கப்பட்டது.
ஜூலை 12,1997
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் பெண் மலாலா பிறந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback