இப்போதெல்லாம் போரில் ஒரு நாடு மற்ற நாட்டிற்குச் சேதம் விளைவிக்க முதலில் வான்வெளி தாக்குதலை நடத்துகிறது. அதன்பின்பே தரைவழியாக அந்த நாட்டை தாக்கும். ஆனால் முந்தைய நாட்களில் இந்த வான்வழி தாக்குதலுக்கு எல்லாம் வழியில்லை. எட்ட இருந்து குண்டு போடுகின்ற தொழில்நுட்பமும் அப்போதெல்லாம் இல்லை. எங்கே குண்டு வைக்க வேண்டுமோ அங்கே நேரடியாகப் போய் வைப்பது தான் ஒரே வழி. இப்படி வைக்கப்படுகின்ற அந்த குண்டு பெரும்பாலும் உலோகத்தில் செய்யப்பட்டிருக்கும். அதை பிடாட்(pitard) என்று குறிப்பிடுவார்கள். அப்படி வைக்கும்போது வைத்ததிலிருந்து சில நிமிடங்கள் கழித்து வெடிப்பது போல பியூஸ் வைத்திருப்பார்கள். சில நேரங்களில் அந்த பியூஸ் மெதுவாக எரிவதற்குப் பதிலாக ஏதாவது கோளாறின் காரணமாக உடனே எரிந்து அப்போதே வெடித்து விடுவதும் நடந்தது. யார் குண்டு வைக்கிறார்களோ அவர்களும் சேர்ந்து அந்த இடத்திலேயே இறந்து விடுவர்.
ஷேக்ஸ்பியர் எழுதிய ஹேம்லெட் (Hamlet) இது போன்ற ஒரு நிகழ்ச்சியைக் காட்டுகிறது. Hoist with his own petard என்பது Hamlet இல் இருந்து வந்தது. இதில் வரும் petard என்பது கொஞ்சம் சின்ன சைஸ் வெடிகுண்டைக் குறிக்கும்.
Hoist என்பது நமக்குத் தெரிந்த வார்த்தை தானே. ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் flag hoisting, sweet distribution எல்லாம் தெரியும். இங்கே வருகிற hoist தூக்கி வைப்பதைக் குறிக்கும். நாமே வைத்த வெடிகுண்டில் நாமே சிக்கிக் கொள்வது தான் இந்த வரிகளுக்குப் பின் உள்ள சூழல்.
வேறு யாரும் அல்ல; நாமே நமக்குக் கெடுதலைத் தேடிக் கொள்வது தான் இந்த வரிகள் சொல்ல வரும் விஷயம்.
சீதை மேல் கொண்ட மோகத்தால் இராவணன் தேடிக் கொண்ட வினை பற்றி தன் மகன் இந்திரஜித்திடம் "என்னையே நோக்கி யான் இந்நெடும் பகை தேடிக்கொண்டேன்" என்று கூறுவான்.
Hoist with his own petard என்ற மரபுத் தொடருக்கும் அது தான் பொருள்.
Hoist with his own petard என்பதற்கு to create problem for himself என்பதுதான் டிக்ஸ்னரி தருகின்ற பொருள்.
Comments
Post a Comment
Your feedback