ஜூலை 20,1903
போர்டு நிறுவனம் தனது முதலாவது காரை இன்று ஏற்றுமதி செய்தது.
ஜூலை 20,1920
சீதாமலைக்கும் பாலமலைக்கும் இடையே இன்று தான் மேட்டூர் அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இதன் நீளம் 5300 அடி உயரம் 176 அடி.
ஜூலை 20,1937
வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி இன்று ரோம் நகரில் காலமானார்.
ஜூலை 20,1960
சிறிமாவோ பண்டாரநாயகா இலங்கையின் பிரதமராகத் தெரிவானார்.
உலகிலேயே முதன் முதலாகத் தேர்வு செய்யப்பட்ட பெண் பிரதமர் என்ற சாதனைக்கு இன்று சொந்தக்காரர் ஆனார் அவர்.
ஜூலை 20,1969
நீல் ஆம்ஸ்ட்ராங் , எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் காலடி வைத்தனர்.
ஜூலை 20,1919
உலகின் மிக உயரமான சிகரமான எவெரெஸ்ட்டின் உச்சியை அடைந்த முதல் மனிதர்கள் டென்சிங் மற்றும் ஹில்லாரி ஆகிய இருவர்.
அந்த இருவரில் ஒருவரான எட்மண்ட் ஹிலாரி இன்று தான் பிறந்தார்.
முதன் முதலில் உலகின் தென் துருவத்தை அடைந்தவர் என்ற பெருமைக்குரியவரும் இதே ஹிலாரி தான்.
உலகின் வட துருவம், தென் துருவம் என்ற இரண்டையும் அடைந்த முதல் மனிதர் என்ற பெருமையையும் பெற்றவர் இவர்.
ஹிலாரி தன்னுடைய 33ம் வயதில், மே 29 1953ம் நாள் அன்று நேபாள நாட்டைச் சேர்ந்த டென்சிங்குடன் சேர்ந்து இவர் முதன் முதலாக எவரெஸ்ட் மலையின் உச்சியேறி வெற்றி நாட்டினார்.
11 ஜனவரி 2008 அன்று மறைந்தார்.
ஜூலை 20,1920
இராமகிருஷ்ணரின் துணைவியார் சாரதா தேவி அம்மையார் இன்று மறைந்தார்.
வானொலியைக் கண்டுபிடித்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான இத்தாலிய விஞ்ஞானி மார்க்கோனி இன்று மறைந்தார்.


Comments
Post a Comment
Your feedback