ஜூலை 28,1635
அறிவியல் அறிஞர், ஆங்கிலேய மருத்துவர் ராபர்ட் ஹூக் பிறந்த நாள் இன்று.
நுண்ணோக்கியைக் கண்டுபிடித்து அதன் உதவியால் செல்கள் பற்றிய இவரது கண்டுபிடிப்பு தான் உயிரியல் துறையில் பெரும் பங்களிப்பைத் தந்தது.
ஜூலை 28,1907
A.V.M திரைப்படத் தயாரிப்பு நிறுவன நிறுவனர் ஏ. வி. மெய்யப்ப செட்டியார் இன்று தான் பிறந்தார்.
ஜூலை 28,1914
முதல் உலகப் போர் இன்று தொடங்கியது.
நான்கு வருடம், மூன்று மாதம், இரண்டு வாரம் நடந்த இந்தப் போர் நவம்பர் 11, 1918 அன்று முடிவுக்கு வந்தது.
ஜூலை 28,1925
ஹெப்பாடிட்டீஸ் பி வைரஸ் கிருமியைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி Dr Baruch Blumberg, இன்று தான் பிறந்தார்.
இவரது பிறந்த நாளான ஜூலை 28 தான் உலக ஹெப்பாடிட்டீஸ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 28,1976
சீனாவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொழில் நகரமான டாங்ஷான் அடியோடு தரைமட்டமாயிற்று. இதில் சுமார் 6,50,000 பேர் உயிரிழந்தனர். ஏழு லட்சம் பேர் காயமடைந்தனர்.

Comments
Post a Comment
Your feedback